சிறந்த முதலீட்டு தேர்வாக ஏன் ஸ்ரீராம் சிட்டி யூனியன்...

  • Fixed Deposit
  • 1 Years ago
சிறந்த முதலீட்டு தேர்வாக ஏன் ஸ்ரீராம் சிட்டி யூனியன்...
HIGHLIGHTS

  • உங்கள் பணத்திற்கு அதிக பாதுகாப்பு
  • சிறந்த FD விகிதங்கள்
  • சுலபமாக டெபாசிட் செய்ய ஸ்ரீராம் சிட்டி FD ஆன்லைன் வசதி
  • எஃப்.டி. யில் கடன் வசதி


எதிலாவது முதலீடு செய்யலாமா? அப்படின்னு யோசிக்கும்போது, அது பாதுகாப்பா இருக்குமா அப்படிங்கிற கேள்வி தான் நமக்குள்ள வரும் முதல் கேள்வி. அதுவும் இப்ப இருக்கிற கடினமான காலத்தில் நம்ம கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாக்கிறது ரொம்ப முக்கியம். எனவே கணிசமான வருமானம் தரக்கூடிய, முதலீட்டுக்கு பிரச்சனை வராத இடத்தில் டெபாசிட் செய்யுங்க.

பைனான்ஸ் நிறுவனங்கள் நல்ல வட்டி கொடுக்கின்றன. அதற்காக எல்லா நிறுவனங்களிலும் முதலீடு செய்துவிடக் கூடாது. எது பாதுகாப்பானது என்பதை அறிந்து முதலீடு செய்ய வேண்டும்.

அப்படி பார்க்கும் போது, பாதுகாப்பான முதலீடாக நம் நினைவிற்கு முதலில் வருவது பிக்ஸ்ட் டெபாசிட் தான். ஸ்ரீராம் சிட்டி யூனியன் பிக்ஸ்ட் டெபாசிட் இந்த மாதிரி கடினமான காலகட்டத்தில மட்டுமில்ல நீண்ட காலத்திற்கு பயனளிக்க கூடியதாக இருக்கும். வரலாறு காணாத பொருளாதார மந்தநிலை சூழ்நிலை நாட்டில் நிலவும் போது, ஸ்ரீராம் சிட்டி யூனியன் போன்ற நம்பகமான நிறுவனத்திடம் உங்கள் பணத்தை டெபாசிட் செய்வது சிறந்த முடிவாக இருக்கும்.

பாதுகாப்பான முதலீடுடன் சேர்த்து அதிக வட்டியையும் விரும்புபவர்களுக்கு, மற்றவர்களுடன் ஒப்பிடும் போது வருடத்திற்கு 8.25%, அதிக FD வட்டி விகிதம் தருகிறது ஸ்ரீராம் சிட்டி யூனியன். தொந்தரவில்லாத சிறந்த முதலீட்டு அனுபவத்தை யும் உறுதி செய்கிறது.

ஸ்ரீராம் சிட்டி யூனியனின் பிக்ஸ்ட் டெபாசிட் ஏன் சிறந்த முதலீடு என்பதை பார்க்கலாம் வாங்க.

உங்கள் பணத்திற்கு அதிக பாதுகாப்பு

பிக்ஸ்ட் டெபாசிட்டில் முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தின் ரேட்டிங்கை சரிபார்ப்பது தான் முதலில் செய்ய வேண்டிய விஷயம். CRISIL-ன் FAAA/stable ரேட்டிங்கும், ICRA-ன் MAA+/stable ரேட்டிங்கும் அதிக நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் குறிக்கிறது. ஸ்ரீராம் சிட்டி யூனியன் இந்த ரேட்டிங்குகளைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் CARE-ன் AA+ ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இதனால் நிதியின் பாதுகாப்பு அம்சத்தைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
 

ஸ்ரீராம் சிட்டி யூனியனின் FD விகிதங்கள் தான் சிறந்தவை.

க்யூமிலேட்டிவ்: இதில் முதிர்ச்சி தொகையுடன் உங்களுக்கான வட்டியையும் நீங்கள் பெறுவீர்கள். குறைந்தபட்சம் 5,000 ரூபாயுடன் நீங்கள் டெபாசிட்டை ஆரம்பித்து பின்னர் ஆயிரம் ஆயிரமாக உங்கள் டெபாசிட்டை அதிகரித்து கொள்ளலாம். 12 மாத டெபாசிட் தொகைக்கு வருடத்திற்கு 7.01% முதல் 60 மாத டெபாசிட் தொகைக்கு 7.95% வரை வட்டியைப் பெறலாம்.

நான்-க்யூமிலேட்டிவ்: இதில், நீங்கள் ஒரு மாதம் / காலாண்டு / அரை ஆண்டு மற்றும் வருடாந்திர இடைவெளியில் வட்டியைப் பெறலாம். இதிலும் குறைந்தபட்ச டெபாசிட்டாக 10,000 ரூபாயை செலுத்த வேண்டும். பின்னர் ஆயிரம் ஆயிரமாக உங்கள் டெபாசிட்டை அதிகரித்துக் கொள்ளலாம். 12 மாத டெபாசிட் தொகைக்கு வருடத்திற்கு 7.01% முதல் 60 மாத டெபாசிட் தொகைக்கு 8.25% வரை வட்டியைப் பெறலாம்.

மூத்த குடி மக்களுக்கான நம்பகமான தேர்வு

மூத்த குடிமக்கள் தங்களின் வருமானத்துக்கும் பெரும்பாலும், பிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களை நம்பி இருப்பார்கள். எனவே அவர்களுக்கு பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் உறுதியான வருமானத்தை வழங்கும் முதலீடு மிகவும் அவசியம்.

மூத்த குடிமக்களுக்காக ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் க்யூமிலேட்டிவ் டெபாசிட்டிக்கிற்கு வழங்கும் வட்டி விகிதத்துடன் வருடத்திற்கு 0.40% கூடுதல் நன்மையை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் யாரையும் நம்பாமல் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பணம் மிகவும் அவசியம். எனவே தேவையான நேரங்களில் தங்கள் பணத்தை அவர்கள் எடுத்துக் கொள்ள வசதியாக ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நான் கியூமிலேட்டிவ் டெபாசிட் மூலம் மாதாந்திர / காலாண்டு / அரை ஆண்டு / ஆண்டுக்கான வட்டி தரும் ஆப்ஷனையும் வழங்குகிறது.

சுலபமாக டெபாசிட் செய்ய ஸ்ரீராம் சிட்டி FD ஆன்லைன்

இப்போது வீட்டிலிருந்தபடியே நீங்கள் பாதுகாப்பாக முதலீடு செய்யும் அனுபவத்தை SCUF ஆன்லைன் டெபாசிட் உங்களுக்கு வழங்குகிறது. ஆன்லைனில் பிக்ஸ்ட் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்ய நீங்க செய்ய வேண்டியவை, தேவையான விவரங்களை நிரப்புங்க, உங்களுக்கு பிடித்தமான ஸ்கீமை தேர்ந்தெடுங்க, அதாவது கியூமிலேட்டிவா அல்லது நான் கியூமிலேட்டிவ் டெபாசிட்டா என்பதை தேர்ந்தெடுங்க. இதோடு சேர்த்து உங்க தனிப்பட்ட விவரங்கள், வங்கி விவரங்கள், SCUF ஆன்லைன் டெபாசிட்டை தொடங்க தேவையான சான்றிதழ்களை கொடுங்க. அவ்வளவுதான் ரிலாக்ஸா உட்கார்ந்து ஸ்ரீராம் சிட்டி யூனியனின் ஆன்லைன் பிக்ஸ்ட் டெபாசிட்டின் பலனை அனுபவியுங்க.

ஸ்ரீராம் எஃப்.டி. யில் கடன் வசதி

உங்களுக்கு பணம் தேவைப்படும் காலங்களில் உதவி செய்யும் நம்பகமான நண்பனைப் போல செயல்படுகிறது ஸ்ரீராம் சிட்டி எஃப்.டி. குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பிறகு உங்கள் ஸ்ரீராம் சிட்டி எஃப்.டி டெபாசிட்டிற்கு எதிராக அதிகபட்சமாக 75% கடன் தொகையை, நீங்கள் தேர்ந்தெடுத்த ஸ்கீமை பொருத்து 2% வட்டியுடன் பெறாலாம்.

இறுதி கருத்து

வங்கி சாரா நிதி நிறுவனமாக (NBFC)1986 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஸ்ரீராம் சிட்டி, ஒரு முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமாகும். ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் (SCUF) சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் குழுமத்தின் ஒரு பகுதியாகும், இது தொடங்கி 46 வருடங்கள் ஆகிறது. எனவே நீங்கள் இந்தியா முழுவது உள்ள முதலீட்டாளர்களின் நம்பிக்கையை சம்பாதித்திருக்கும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸில் முதலீடு செய்யும் போது உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது உறுதி. அதோடு மட்டுமல்லாமல் மிக உயர்ந்த எஃப்.டி வட்டி விகிதங்களையும் பெறுவீர்கள்.

எந்தவொரு தனிப்பட்ட பங்குகளிலும் நீங்கள் முதலீடு செய்தால் நீங்கள் முதலீட்டு அபாயங்களைச் சந்திக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் முதலீடு செய்யும் பங்கு மோசமாக இருந்தால் அல்லது நிறுவனம் திவாலாகிவிட்டால், நீங்கள் அதிக பணத்தை இழக்க நேரிடும். ஆனால் மற்றவைகள் போல் இல்லாமல் பிக்ஸ்ட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் திட்டம் முடியும் போது வட்டியுடன் சேர்த்து உங்கள் பணம் முழுமையாக உங்களுக்கு கிடைத்துவிடும்.

கடைசியாக நீங்கள் பிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் முன் தவறான ஏஜென்சிகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். சந்தேகளை தீர்த்துக்கொள்ள மற்றும் உதவி கேட்க நீங்கள் தயங்க தேவையில்லை எங்களின் முதலீட்டு ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார்கள். அவர்கள் மார்க்கெட்டின் தற்போதைய ஏற்ற இறக்கங்களைப் பற்றி எடுத்துக்கூறி உங்களை சரியான பாதையில் வழிநடத்துவார்கள்.